Thursday, 19 December 2019

சிந்தனைக்கு உணவு 1

🌸ஆனந்த மார்க யோக அறிவியல் 🌸
 🌸சிந்தனைக்கு உணவு🌸

யோக அறிவியல்
🌿🌿🌿🌿🌿🌿

இன்றைய நாகரிக உலகில் வியக்கத்தக்க வெற்றிகளை நாம் அடைந்திருந்தாலும் இன்றைய மனிதர்கள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மன அமைதியையும் மகிழ்வையும்  குறைவாகத்தான் பெற்றிருக்கிறார்கள். இதற்கு காரணம் நம்முடைய வாழ்வானது சமநிலையை இழந்துவிட்டதுதான். மக்கள் நெருக்கடி, மாசுநிறைந்த சுற்றுச்சூழல், வேகமான வாழ்க்கை மற்றும் வேலைச் சுமை, சரியான உடற்பயிற்சியின்மை, முறையற்ற உணவுப் பழக்கம் மற்றும் அதிகமாக உண்ணும் பழக்கம், நம்மைச் சுற்றி எல்லா திசைகளிலும் எதிர்மறையான கவர்ச்சிகள் போன்ற இவை அனைத்தும் நம்முடைய உடலையும் மனதையும் கீழ்நிலைக்கு தள்ளுகின்றன. விஞ்ஞான முறையில் யோக பயிற்சிகளை செய்வதன் மூலம் சமநிலையான வாழ்வை மீண்டும் பெறுவதற்கான வழியை நாம் கற்றுக்கொள்ளலாம், ஆரோக்கியமான உடலையும் அமைதியான மனதையும் மீண்டும் பெறலாம்.
உடல் முன்னேற்றத்திலிருந்துதான் இந்தப் பயிற்சி துவங்குகிறது. ஏனென்றால் உடல்தான் முழுமுதற்பொருளை நோக்கி, நமது இலட்சியமாகிய முடிவில்லா பேரானந்த மெய்யுணர்வை நோக்கிப் பயணம் செய்வதற்குரிய வாகனமாக பயன்படுகிறது. அத்தகைய உடலை நாம் பராமரிக்க வேண்டுமானால் நாம் சாப்பிடுகின்ற உணவில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் உணவானது நம்முடைய உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்று நிலைகளிலும் ஆழமான விளைவுகளை உண்டாக்குகின்றது

🌸🙏🌸
ஆனந்த மார்க - Food for Thought - என்ற  புத்தகத்திலிருந்து



No comments:

Post a Comment