Sunday, 22 December 2019

சிந்தனைக்கு உணவு 4

🌸 *ஆனந்த மார்க யோக அறிவியல்🌸

🌸சிந்தனைக்கு உணவு 4* 🌸

 *மாமிசம் சாப்பிட்டால் என்ன தவறு* ?

தாவர உணவைப் பற்றி பேசுகின்றபோது நிறையபேர் கேட்கின்ற கேள்வி என்னவென்றால், “மாமிசம் சாப்பிட்டால் என்ன தவறு? கோடிக்கணக்கான மனிதர்கள் அதை சாப்பிடும்போது நான் ஏன் அதை நிறுத்த வேண்டும்?” என்பதுதான்.
மாமிசம் ஏன் சாப்பிடக் கூடாது என்பதற்கு மிக முக்கிய காரணங்கள் உள்ளன. அவை உணர்ச்சிவேகக் காரணங்களோ அல்லது உணர்ச்சிவசமான காரணங்களோ அல்ல, அதற்கு மாறாக அறிவுப்பூர்வமான மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்கள் ஆகும். இந்த விபரங்களை கவனமாக புரிந்துகொண்டால், நிச்சயமாக நீங்கள் இப்போதே தாவர உணவுகளை சாப்பிட முயற்சி மேற்கொள்வீர்கள்.


 *நமது முன்னோர்கள் எப்போதும் மாமிச உணவைத்தானே சாப்பிட்டார்கள், இல்லையா?*

இல்லை, இன்றுவரை ஆராய்ச்சி செய்ததில், விஞ்ஞானிகளின் முடிவு என்னவென்றால், நம்முடைய முன்னோர்கள் தாவர உணவைத்தான் உண்டார்கள் என்பதுதான். அவர்கள் உணவே கிடைக்காத காலங்களைத் தவிர மற்ற காலங்களில் மாமிசத்தை சாப்பிடவே இல்லை. கடந்த பனியுகத்தில்தான், பழங்களும், கொட்டைகளும், காய்கறிகளும் கிடைக்காமல் போனதால், நம்முடைய முன்னோர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக விலங்குகளின் மாமிசத்தை சாப்பிடத் துவங்கினார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக வடதுருவத்தில் வாழுகின்ற எஸ்கிமோhக்கள் மற்றும் பழங்குடியினர் போன்றவர்கள், அவசியத்தின் காரணமாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ, சூழ்நிலைக் காரணமாகவோ அல்லது சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தாலோ அந்த மாமிசம் சாப்பிடுகின்ற பழக்கமானது பனியுகத்திற்குப் பின்பும் தொடர்ந்தது. ஆனாலும் வாரலாறு முழுவதிலும் பல தனி மனிதர்களும், சில இனத்தைவர்களும் உடல் நலத்திற்கும், மனத்தூய்மைக்கும் அல்லது ஆன்மீக மேன்மைக்கும் உகந்த சுத்தமான உணவின் முக்கியத்தை உணர்திருந்தார்கள், அதனால் அவர்கள் தாவர உணவை உண்பவர்களாகவே இருந்தார்கள்.

🌸🙏🌸
(ஆனந்த மார்க - Food for Thought - என்ற  புத்தகத்திலிருந்து)

ஆனந்த மார்க தியான யோகத்தை அறிந்துகொள்ள,  9380851222 எண்ணில் தொடர்புகொள்ளவும்

.....தொடரும்...

No comments:

Post a Comment