ஆனந்த மார்க யோக அறிவியல்
சிந்தனைக்கு உணவு- 2
சாத்வீக ஆற்றலும் சத்வகுண உணவுகளும்:
-------------------------------------------------
இந்த ப்ரபஞ்சத்தின் முதல் ஆற்றலானது சுய உணர்வு, அன்பு, அமைதி, தூய்மை மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொடுக்கும் சத்வ ஆற்றலாகும். நம்முடைய மனதில் இந்த சத்வ ஆற்றலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது, நாம் அமைதியாகவும், சாந்தமாகவும் இருப்பதை உணரமுடியும். அந்த நிலையில் நம்முடைய மனம் உயர்மெய்யுணர்வை நோக்கிச் செல்கிறது. சத்வ ஆற்றல் அதிகமாக உள்ள உணவுகளை ‘சத்வ உணவுகள்’ என்று சொல்கிறோம். அவை நம்முடைய மனதை தெளிவாகவும் அமைதியாகவும் வைத்திருக்கின்றன. இந்த உணவுகள்தான் யோகிகளின் அடிப்படை உணவுகள். ஏனென்றால் இந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும் ஏற்ற மிகச் சிறந்த உணவாகும். மனதை உயர் மெய்யுணர்வு மற்றும் தன்னுணர்வு நிலைக்கு உயர்த்த விரும்புகின்றவர்களுக்கு இவை மிகச்சிறந்த உணவாகும்.
சத்வ உணவுகள்:
------------------------------
பழங்கள், பெரும்பான்மையான காய்கறிகள், பீன்ஸ் மற்றும் கொட்டைகள், தானியங்கள், பால் மற்றும் பால்பொருள்கள், சிறிதளவு மசாலாப் பொருள்கள் ஆகியவை சத்வ உணவுகளாககும். சத்வ உணவுகள் நமக்கு புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்பு மற்றும் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமப் பொருள்களையும் தருகிறது.
ரஜோ ஆற்றலும் ரஜோ உணவுகளும்:
--------------------------------------------------------------
இந்த ப்ரபஞ்சத்தின் இரண்டாவது ஆற்றல் ரஜோ ஆற்றலாகும். இது இயக்கத்தை, செயல்பாட்டை அல்லது மாற்றத்தை தடைசெய்கின்ற ஆற்றலாகும். நம்முடைய மனதில் இந்த ஆற்றல் ஆதிக்கம் செய்கின்ற போது நாம் குழப்பத்தோடும், பதட்டத்தோடும், அமைதியற்ற நிலையிலும் இருப்போம். அமைதி பெற முடியாமலும் பதற்றம் குறையாமலும் இருப்போம். ரஜோ குண உணவுகள் உடல் உணர்வுகளையும் மன உணர்ச்சிகளையும் தூண்டக்கூடியவை, அதனால் நம்முடைய மனச் சமநிலையை பாதுகாப்பதற்காக அவற்றை குறைவாகவே சாப்பிட வேண்டும். உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய இந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் அவை மனதை தொந்தரவு செய்வதோடு தியானம் போன்ற அதிநுட்ப காரியங்களில் மனதை ஒருமுகப்படுத்த முடியாமலும் செய்கிறது.
ரஜோ குண உணவுகள்:
-------------------------------------------
காபி மற்றும் தேநீர் போன்ற பானங்கள், கரியமில வாயு கலந்த பானங்கள், சாக்லேட்டுகள், காரமான சிவப்பு மிளகு, நொதிக்க வைத்த உணவுகள் மற்றும் சில மருந்துகள் ஆகியன ரஜோ குண உணவுகளாகும்.
தமோ ஆற்றலும் தமோ குண உணவுகளும்:
---------------------------------------------
மூன்றாவது ஆற்றல் தமோ ஆற்றல். மந்தநிலை, செயலற்ற தன்மை, சிதைவு மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கான ஆற்றல் இது. உயிருள்ள எந்த உடலிலும் மற்ற இரண்டு ஆற்றல்களும் முழுமையாக மறைந்துபோய் தமோ ஆற்றல் மட்டும் ஆதிக்கம் செய்கின்றபோது இறப்பு நேரிடுகிறது. நம்முடைய மனதில் இந்த ஆற்றல் செயல்படுகின்றபோது நமக்கு உறக்கம் வருகிறது, மந்தநிலை, உற்சாகமின்மை, வலிமையற்ற உணர்வு மற்றும் செயலாற்ற விருப்பமின்மை ஆகிய தன்மைகளை நாம் உணருகிறோம்.
(ஆனந்த மார்க - Food for Thought என்ற புத்தகத்திலிருந்து)
🙏குரு அருளே துணை🙏
தொடரும்..........

No comments:
Post a Comment