இந்த உலகைவிட்டுச் செல்லும்போது சிரித்த முகத்தோடு விடைபெற வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகில நீங்கள் மிகக் குறைந்த காலத்திற்குதான் வந்திருக்கிறீர்கள் என்றாலும், சமுதாய சேவையையும் சேர்த்து இன்னும் பல்வேறு காரியங்களுக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றீர்கள். அதனால் நீங்கள் அறிவாலும் புத்திசாலித்தனத்தாலும் எல்லா வழிகளிலும் உங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம், உங்களுடைய கடமைகளையும் பொறுப்பகளையும் நீங்கள் நிறைவேற்றவும் வேண்டும். உங்களுடைய கடமைகள் முடிந்துவிட்டபோது நீங்கள் இந்த உலகிடமிருந்து சிரித்த முகத்தோடு விடைபெற வேண்டும். இந்த இடத்தில் துளசிதாஸரின் வார்த்தைகளைக் குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும்.
“துள்ஸி ஜப் தும் ஜக் மே ஆயே ஜக் ஹஸா தும் ரோயே
அய்ஸி கர்னீ கரேலோ தும் ஹாஸோ ஜக் ரோயே”
(துள்ஸி, நீ இந்த உலகிற்கு வந்தபோது உலகம் சிரித்தது ஆனால் நீ அழுதாய். உன்னுடைய புனிதப் பணிகளை தொடர்வாயாக. அப்போதுதான் நீ இறக்கின்றபோது நீ சிரிப்பாய், இந்த உலகம் அழும்)
ஒரு குழந்தை பிறக்கின்றபோது அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் சிரிப்பார்கள் ஆனால் அந்தக் குழந்தையோ அழுகிறது. ஆனால் நீங்கள் இந்த உலகை விட்டுச் செல்கின்றபோது உங்களுடைய முகத்தில் புன்னகை மலரவேண்டும் ஆனால் உங்களுடைய பிரிவைப் பார்த்து இந்த உலக மக்கள் கண்ணீர் சிந்தி அழவேண்டும்.
அத்தகையதொரு பயனுள்ள வாழ்வை நீங்கள் வாழ வேண்டும். தங்களுக்குத் தேவையான நேரத்தில் உண்மையாய் உதவிய மனிதனின் இழப்பைக் கண்டு மக்கள் துக்கம் கொள்வார்கள். உயிருள்ளவரை இத்தகைய நற்காரியங்களை செய்தாகவேண்டும் என்ற உறுதிமொழியை நீங்கள் எல்லோரும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் சிரித்தமுகத்தோடு இந்த உலகை விட்டு நீங்கள் செல்லவேண்டும்.
🌷 ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி 🌷
(ஆனந்த வச்சனாம்ருதம் 8ம் பாகத்திலிருந்து)
No comments:
Post a Comment