கெளசிகீ - மனம் விரிவடையும் நடனம்
-------------------------------------------------------------------------------------------------------------------------
மனிதர்கள் சில நேரங்களில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம், மேலும் அடிக்கடி அவர்கள் தங்கள் சாதனாவிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த தடைகள் பெரியதாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். உதாரணமாக, கல்லீரல் பிரச்சனை போன்ற சிறிய நோய்கள் அவ்வப்போது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும், மேலும் இந்த வகையான தடைகளை நீக்குவதற்காக, 1978ம் வருடம், செப்டம்பர் 6ம் தேதி நான் கெளசிகீ [“மனதின் விரிவாக்கம்”] நடனத்தைக் கண்டுபிடித்தேன். இந்த நடனம் இருபத்து இரண்டு வகையான நோய்களை தீர்க்கும் மருந்து ஆகும்.
(1) இவை அனைத்தும் முதலில் புறச்சூழ்நிலைகளை சரிசெய்வதை உறுதிசெய்வதிலும், அதன்பிறகு அவை மனதின் உணர்வுகளை சரிசெய்வதற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பரமபுருஷன் வாழுகின்ற இடமாகிய ஆன்மா என்ற புள்ளியில் மனதை குவிக்கவும் இது உதவுகிறது.
கெளசிகீ நடனத்தின நன்மைகள் பின்வருமாறு:
1. இது தலை முதல் கால் வரை அனைத்து சுரப்பிகளையும் மற்றும் கால்களுக்கும் உடற்பயிற்சி தருகிறது.
2. இது நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது.
3. இது பிரசவத்தை எளிதாக்குகிறது.
4. முதுகெலும்பை நெகிழ்வானதாக மாற்றுகிறது.
5. முதுகெலும்பு, கழுத்து, இடுப்பு மற்றும் பிற மூட்டுவீக்கத்தை அகற்றுகிறது.
6. முதுகெலும்பு, கழுத்து, கைகள் மற்றும் இடுப்பில் கீல்வாதத்தை அகற்றுகிறது.
7. மனம் வலுவாகவும் கூர்மையாகவும் மாறுகிறது.
8. மாதவிடாய் முறைகேடுகளை குணமாக்குகிறது.
9. சுரப்பிகளின் சுரப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.
10. சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாயில் உள்ள சிக்கல்கள் குணமாகிறது.
11. இது கைகால்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
12. இது முகம் மற்றும் தோலுக்கு அழகையும் பிரகாசத்தையும் சேர்க்கிறது.
13. இது தோல் சுருக்கங்களை நீக்குகிறது.
14. இது சோம்பலை நீக்குகிறது.
15. இது தூக்கமின்மையை குணப்படுத்துகிறது.
16. இது மூர்க்கத்தனத்தை குணப்படுத்துகிறது.
17. பயமனப்பான்மை அகற்றப்படுகிறது.
18. நம்பிக்கையற்ற தன்மை நீங்குகிறது.
19. இது சுய வெளிப்பாட்டிற்கும் திறனை வெளிக்காட்டுவதற்கும் உதவுகிறது.
20. முதுகெலும்பு வலி, மூலம், குடலிறக்கம், ஆண்களில் விரைவீக்கம், நரம்பு வலி, நரம்பு செயலின்மை ஆகியவற்றை குணமாகக்குகிறது.
21. இது சிறுநீரகம் மற்றும் பித்தப்பை தொல்லைகள், இரைப்பை பிரச்சனை, அஜீரணம், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு, பாலின உறுப்பு நோய்கள், பால்வினை நோய்கள், உடல் பருமன், உடல்மெலிவு மற்றும் கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது.
22. இது 75-80 வயது வரை வேலை செய்யும் திறனை அதிகரிக்கிறது.
🌷ஸ்ரீ ஸ்ரீ ஆனந்த மூர்த்தி🌷
9 நவம்பர் 1978, கல்கத்தா.
No comments:
Post a Comment