அனுதியானம் என்றால் என்ன?
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
தியானத்தின் எல்லைக்குள் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று தாரணா மற்றொன்று த்யான. புறத்தில் உள்ள ஒரு பொருளை உங்களுடைய மனதின் எல்;லைக்குள் பிடித்து வைக்க முயலுகின்ற செயலுக்கு தாரண என்று பெயர். எனவே தாரணாவில் அசைவற்ற ஒரு சக்தி இருக்கிறது. ஆனால் மனதினுள் ஏதேனும் ஒன்று நகருகின்றபோது, அதாவது அந்த நகரும் பொ்ருளை, அந்த நகர்தலை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான், அல்லது தொடர்வதுதான் தியானம் என்பது. எனவே தியானத்தில் ஒரு இயக்க சக்தி இருக்கிறது.
தியானக்கிரியா என்பது வெல்லப்பாகில் உள்ள நூலிழை போன்றது. வெல்லப்பாகை ஊற்றும்போது ஒரு நூல் இழை உருவாகிறது. அதில் ஒரு ஆற்றல் இருக்கிறது, அந்த நூலில் ஒரு இயக்கம் இருக்கிறது. ஆனால் கண்ணுக்கு அது செயலற்றதாக தெரிகிறது. தியானக்கிரியாவும் அதுபோலத்தான். புரிகிறதா உங்களுக்கு?
அனுதியானம் என்றால் என்ன? அபித்யானம் என்றால், நீங்கள் பரம்பொருளை உங்களுடைய தியானப் பொருளாய் ஏற்றுக்கொண்டீர்கள், ஆனால் உங்களுடைய இறைவன் உங்களை வேண்டாம் என்று சொல்கிறான், உதாரணமாக நீங்கள் ஒரு பாவி, அதனால் உங்கள் இறைவனை நீங்கள் அடைவதை அவன் விரும்பவில்லை. அவன் உங்களை விட்டு தூரமாக செல்ல முயற்சிக்கிறான். ஆனால் இந்த இடத்தில் அவனை உங்கள் மனதால் விரட்டி பிடிக்க வேண்டும். இந்த மனதால் ஓடி பிடிக்கின்ற செயல்தான் அனுத்யானம் என்பது. நீங்கள் “ஓ என் இறைவா, நான் ஒரு பாவியாக இருக்கலாம் ஆனால் நான் உன்னை விடமாட்டேன், உன்னை பிடித்தே தீருவேன்” என்று சொல்ல வேண்டும். இத்தகைய மனநிலை ஏற்படுகின்றபோது அதைத்தான் அனுத்யானம் என்று சொல்கிறோம். எனவே இந்த அனுத்யானம் இல்லாமல் அவனை அடையவே முடியாது.
🌷ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி🌷
(சுபாஷித சங்ரஹ பாகம் 18ல் இருந்து)
No comments:
Post a Comment