தத்வபாவாத் என்றால் என்ன?
👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺👺
தத்வபாவாத் என்றால்; சமஸ்கிருதத்தில் தத் என்றால் அது என்றும் அதனோடு “த்வ” என்ற பிற்சேர்க்கை சேரும்போது அது ஒரு பண்புப் பெயராக மாற்றம் அடைகிறது. எனவே 'தத்வ' என்றால் 'அதுவாதல்' என்று பொருள். இங்கே அது என்பது ப்ரஹ்மத்தை குறிக்கிறது. ப்ரஹ்ம என்பது ஒரு பொதுப்பால் ஆகும். பரம புருஸன், அதாவது மெய்யறிவு தத்துவம் என்பது ஆண்பால் ஆகும். பரம ப்ரக்ருதி, அதாவது இயக்க தத்துவம் பெண்பால் ஆகும். ப்ரஹ்ம என்பது பொதுபால் ஆகும். இங்கே அதுவாதல் என்றால் ப்ரஹ்மமாக ஆதல் என்று பொருள். தத்வபாவாத் என்றால், உலகியல் எந்த பணிகளை செய்யும்போதும், நீங்கள் அந்தப் பொருளை ப்ரஹ்மமாக பாவிக்க வேண்டும். அதேபோல மனதில் எதை நினைத்தாலும் உங்களுடைய அந்த எண்ணத்தின் பொருளை ப்ரஹ்மமாக பாவிக்க வேண்டும். இதுதான் தத்வபாவாத் என்பது.
🌷 ஸ்ரீஸ்ரீ ஆனந்தமூர்த்தி 🌷
(சுபாஷித சங்ரஹ பாகம் 18ல் இருந்து)
No comments:
Post a Comment